04

E   |   සි   |  

2026 பெப்ரவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XL (40)  ஆம் பகுதியையும்; 
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVII (47)  ஆம் பகுதியையும்; 
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXII (62), LXIII (63), LXIV (64) மற்றும் LXV (65)   ஆம் பகுதிகளையும்; 
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIX (69)  ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII (53) மற்றும் LIV (54) ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXVI (36), XXXVII (37), XXXVIII (38), XXXIX (39), XL (40), XLI (41), XLII (42) மற்றும் XLIII (43) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XXV (25) மற்றும் XXVI (26)    ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIII (23), XXIV (24), XXV (25), XXVI (26), XXVII (27) மற்றும் XXVIII (28) ஆம் பகுதிகளை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் பதினேழாவது அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
இலங்கை பொலிஸ் சேவை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச குற்ற வலையமைப்பிற்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள்

(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப்பரப்பு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண குடிப்பரம்பல் மீது ஏற்படும் தாக்கம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
2022 ஆம் ஆண்டில் கடன் தேக்கம் மற்றும் இறையாண்மை இயல்புநிலையின் சட்ட மற்றும் நிதி தாக்கம் தொடர்பாக 2025.11.11 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களுக்கு “கண்டிய திருமண, மணநீக்க (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    நீதித்துறை (திருத்தம்)
(ii)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) 
- திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து  


அதனையடுத்து, 1744 மணியளவில் பாராளுமன்றமானது 2026 பெப்ரவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks