பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான 1990 சுவசெரிய மன்றத்தின் ஆண்டறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
அரசாங்க உத்தியோகபூர்வ இருப்புக்கள் தொடர்பான மத்திய வங்கியின் புதிய சுற்றறிக்கை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
தேசிய மகளிர் ஆணைக்குழுவை செயற்படுத்துதல் தொடர்பாக 2026.02.03 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேதமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ (திருமதி) சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரியாஸ் பாருக் அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 பெப்ரவரி 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சாமர சம்பத் தசனாயக அவர்களுக்கு “சிறுவர்களுக்கான மஹாவிலச்சிய கல்வி நிலைய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஊழல் அற்ற நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2026 பெப்ரவரி 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks