பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
3 : “இருப்பாட்சியாளா்களைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
4 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 36(1) மற்றும் 36(3) ஆம் பிரிவுகள் பிரகாரம் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்று
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2025.12.01 முதல் 2025.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 சனவரி 28 ஆம் திகதிய 2473/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v) 2024 ஆம் ஆண்டுக்கான ஆயுள்வேத மருத்துவப் பேரவையின் வருடாந்த அறிக்கை
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரெல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) டிஜிட்டல் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க வீரரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தேசிய மகளிர் ஆணைக்குழுவை செயற்படுத்துதல்
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
‘தித்வா’ புயலுக்குப் பிறகு இழப்பீடு, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்துதல்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி தொடர்பாக 2026.01.07 அன்று கௌரவ திலிண சமரகோன் அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 ஜனவரி 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1759 மணியளவில் பாராளுமன்றமானது 2026 பெப்ரவரி 5ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks