E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் (திருத்தம்)

1980ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க, பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ கமத்தொழில் அமைச்சர் சார்பாக கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.


கெளரவ விக்டர் அந்தனீ அவர்களுக்கு "கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்களுக்கான இலங்கை அவை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"2011க்கான பாடசாலைச் சீருடைத் துணி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1357 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மே 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks