01

E   |   සි   |  

2026 ஜனவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டுக்கான புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் மொத்தமாக பணம் எடுப்பதை மாதாந்த ஓய்வூதிய திட்டமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளமை 


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
முல்லைதீவு வைத்தியசாலையில் பாடசாலை மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக 2026.01.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்  அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ இம்ரான் மகரூப் அவர்களுக்கு “யூஎன்வீ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை
“கல்விச் சீர்திருத்தங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks