01

E   |   සි   |  

2026 ஜனவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
3 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி
4 : தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்குப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவையின் வருடாந்த அறிக்கை
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசயைின் வருடாந்த அறிக்கை
(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொல்லியல் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சம்பிக ஹெட்டிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
லக்விஜயா மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோக விலைமனு கோரல் நடைமுறையில் தோல்வி

கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
சுற்றுலா வருகைக்கும் தனிநபர் சுற்றுலா வருவாய்க்கும் இடையிலான துண்டிப்பு


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    இருப்பாட்சியாளர்களைப் பாதுகாத்தல் - வளவொன்றில் இருப்பாட்சியிலிருந்து ஆட்களை வெளியேற்றுவதிலிருந்து நிலக்கிழார் ஒருவரைத் தடுப்பதற்கும்; மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்கானது
(ii)    வாடகை (நீக்கல்) - 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வாடகைச் சட்டத்தை நீக்குவதற்கானது

கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(iii)    கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் - கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களின் தொழிலைக் கொண்டு நடாத்துதலை ஒழுங்குபடுத்துவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடுசெய்வதற்கானது
(iv)    கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) - 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தைத் திருத்துவதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புபட்ட மற்றும் அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஜீ. விஜேரத்ன  


அதனையடுத்து, 1722 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜனவரி 21ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks