E   |   සි   |  

2025 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்மாயில் முத்து மொஹம்மட் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXI (31) மற்றும் XXXII (32) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XXI (21) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVIII (18) மற்றும் XIX (19) ஆம் பகுதிகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தின் (NIBM)  துணை கம்பனியொன்றாக காணப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ கல்வி நிறுவனத்தினை (NSBM)  உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாற்றும் செயல்முறையின் முறையற்றதன்மை மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ், பெறுமதி சேர் வரி மீளளிப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 31 ஆம் திகதிய 2460/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2025 நவெம்பர் 28 ஆம் திகதிய 2464/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(iii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2025.10.01 முதல் 2025.10.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(iv)    2023/2024 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை
(v)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் பற்றிய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சிவஞானம் சிறீதரன்
தமிழ் மொழி மூல பாடத்திட்டத்திலிருந்து வரலாறு மற்றும் சித்திரப் பாடங்களை நீக்கல்  

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
பத்திர மோசடி குறித்து தன்னைப் பற்றி பிரதம அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக
“பல்கலைக்கழகங்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


சிறப்புரிமைகள்
(i)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 நவம்பர் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றமானது 2025 டிசம்பர் 05ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks