சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-
1. உண்ணாட்டரசிறை (திருத்தம்)
2006ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
2. சேர் பெறுமதி வரி (திருத்தம்)
2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச்சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
3. நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்)
2009ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச்சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
4. பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)
2006ஆம் அண்டின் 13ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
5. செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தம்)
2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
6. மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்)
மாகாண சபைகளுக்கென அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட எல்லா முத்திரைத் தீர்வைகளையும் கைமாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்
7. பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அறவீடு (நீக்கம்)
2006ஆம் அண்டின் 51ஆம் இலக்க, பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தை நீக்கம் செய்வதற்கானதொரு சட்டமூலம்
8. உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
9. மது வரி (திருத்தம்)
(52ஆம் அத்தியாயமான) மது வரிக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
10. வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
1990ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
11. வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு
வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவினை நிறுவுவதற்கும், அந்த ஆணைக்குழுவுக்குரிய அதிகாரங்களை நிர்ணயிப்பதற்கும், அந்த மேன்முறையீடுகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகளை குறிப்பிடுவதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வதற்கான சட்டமூலம்
12. தொலைத் தொடர்பு அறவீடு
2011 சனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஏதேனும் தொலைத்தொடர்பு சேவையைப் பெறும் ஆட்களிடமிருந்து தொலைத் தொடர்பு அறவீட்டை விதிப்பனவு செய்வதற்கும்; 2004 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பாகம் II ஐத் திருத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்
13. துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு
இலங்கைக்கு வெளியில் தோற்றுவாய் கொண்டதும் இலங்கையினுள் இறக்குமதி செய்யப்பட்டதுமான ஒவ்வொரு பொருளின் துறைமுக, விமாநிலைய அபிவிருத்தி அறவீடு என அழைக்கப்பட வேண்டிய அறவீடு ஒன்றினை விதிப்பதற்கும் சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; 2002ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பாகம் Iஐத் திருத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்
14. பற்றுகள் வரி (நீக்குதல்)
2002ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க, பற்றுகள் வரிச்சட்டத்தை நீக்குவதற்கானதொரு சட்டமூலம்
15. நிதி (திருத்தம்)
2006ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நிதிச் சட்டம், 2005ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க நிதிச்சட்டம், 2003 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நிதிச் சட்டம், 1995 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்
கெளரவ கனக ஹேரத் அவர்களுக்கு "மொனறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2011 மார்ச் 03ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 75 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 90 வாக்குகளும் அதற்கு எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மார்ச் 22 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.