E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

குடிசனமதிப்பு (திருத்தம்)

(143ஆம் அத்தியாயமான) குடிசனமதிப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.


பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2011 ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசானின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

"உர ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின்" கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கடலூர்தி தரையிறக்கல் கருத்திட்டத்தை இடைநிறுத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மார்ச் 09 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks