E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு "யூ.எல்.எம். பாறூக் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா அவர்களுக்கு "ஹெல உதாவ தேசிய இயக்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 16 வரையும் அத்துடன் 27 மற்றும் 28ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள்
(ii) நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியும் இரண்டு கட்டளைகளும்
(iii) இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதியும் கட்டளையும்
(iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(v) சுற்றாடல் பாதுகாப்பு தீர்வைச் சட்டத்தின் கீழான கட்டளை
(vi) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(vii) இலங்கை செமட்ட செத மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(viii) பின ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை தாபித்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜிவ விஜேசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1831 மணியளவில் பாராளுமன்றமானது 2011 பெப்ரவரி 24 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks