E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)

தேர்தல்களில் வாக்களிப்பதற்காக வலிமையிழப்பிற்குட்பட்ட ஓர் ஆளுடன் ஆளொருவர் உடன் செல்வதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் (262ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தையும், 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தையும், 1981ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, மக்கள் தீர்ப்புச் சட்டத்தையும், 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தையும், அத்துடன் 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, மாகாணசபைகள் தேர்தல்கள் சட்டத்தையும் திருத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ சமூக சேவைகள் அமைச்சர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "மைத்திரிபால சேனாநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2011 பெப்ரவரி 10 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks