E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

உணவு (திருத்தம்)

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, உணவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ சுகாதார அமைச்சர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு "மகமெவுனாவ சதஹம் சேவாவ (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு "இலங்கையிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை வழங்குவதற்கு வழிசமைப்பதற்கானதோர்" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ தாராநாத் பஸ்நாயக்க அவர்களுக்கு "எஸ்.பீ. நாவின்ன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2011 பெப்ரவரி 03ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 109 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் அதற்கு எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

"வெள்ளம்" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 2030 மணியளவில் பாராளுமன்றமானது 2011 பெப்ரவரி 09 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks