E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களுக்கு "2008 ஆம் அண்டின் 30 ஆம் இலக்க, தெஹிவளை நெதிமாலை பெளத்த கலாசார நிலையம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது..

கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "ஹந்தகல வலகம்பா புராண கல்லென் ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ திலங்க சுமதிபால அவர்களுக்கு "இலங்கை பரிசோதனை ஆய்வுகூடங்களின் சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் அலுவல்கள்

இலங்கை பொருளியற் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

சபையில் பிரேரிக்கப்பட்டு (சட்டவாக்க) நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 9 முதல் 11 ‍ வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) ரோஹித அபேகுணவர்தன மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) செந்தாமரை (சர்வதேச) இலங்கை அமைப்பு (கூட்டிணைத்தல்)
(iii) தாருண்யட்ட ஹெட்டக் ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)



ஒத்திவைப்புப் பிரேரணை

"யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜனவரி 21 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks