E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ முத்தலி பாவா பாறூக் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

முதியோரின் உரிமைகளைப் பாதுகாத்தல் (திருத்தம்)

2000 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க, முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ சமூக சேவைகள் அமைச்சர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "குடாபுத்கமுவ ஸ்ரீ பியதஸ்ஸநாராம செயற் சாதனைச் சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா அவர்களுக்கு "லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சுமித்ரா பீரிஸ் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

சபையில் பிரேரிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டதோடு, சட்டமூலத்தின் குழுநிலை ஒத்திவைக்கப்பட்டது.


பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 டிசம்பர் 29ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 111 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகளும் அதற்கு எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1854 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜனவரி 06 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks