E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்" இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) 2011, 116 பெரும்பான்மை வாக்குகளால் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 'வரவு செலவுத் திட்டம் 2011' பிரிவுக்கு விஜயம் செய்க. (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:- (i) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (ii) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 11 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு "பி" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:- (i) பின ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) (ii) இலங்கை செமட்ட செத மன்றம் (கூட்டிணைத்தல்) (iii) மகேஸ்வரி மன்றம் (கூட்டிணைத்தல் அதனையடுத்து, 1821 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜனவரி 04 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks