ஆலோசனைக் குழுக்கள்
கீழ்க்கண்டவாறு பத்து (10) ஆலோசனைக்குழுக்கள் நியமிக்கப்படுமாக என்றும்,
1. தனியார் போக்குவரத்துச் சேவை பற்றிய ஆலோசனைக்குழு
2. சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக்குழு
3. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை பற்றிய ஆலோசனைக்குழு
4. தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழு
5. கலாசார, கலை அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
6. கமநல சேவைகள், வனசீவராசிகள் பற்றிய ஆலோசனைக்குழு
7. மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
8. தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல் பற்றிய ஆலோசனைக்குழு
9. வினைத்திறன் மேம்பாடு பற்றிய ஆலோசனைக்குழு
10. சிவில் விமானச் சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு
109 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து அறிக்கையிடும் பொருட்டு ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் ஐந்து (5) பேருக்குக் குறையாததும் இருபத்தைந்து (25) பேருக்கு விஞ்சாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும்;
ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் கூட்டநடப்பெண்ணாக மூன்று (3) உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"பாடசாலைக்கான சாரணர் பிரிவு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1929 மணியளவில் பாராளுமன்றமானது 2010 டிசம்பர் 01 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[
வரவு செலவுத் திட்டம் 2011]