E   |   සි   |  

2025 ஜூன் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)” மற்றும் “வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்களுக்கான பாராளுமன்ற  ஒன்றியத்தின் மூலம் உணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் (HDFC வங்கி) ஆண்டறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் வருடாந்த அறிக்கை.
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவை அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ. பீ. சரத்                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1536 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks