E   |   සි   |  

2025 ஜூன் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)” மற்றும் “வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி(திருத்தம்)” ஆகிய சட்டமூலங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : வாய்மூல விடைக்கான வினாக்களின் கீழான குறைநிரப்புக் கேள்விகள் தொடர்பானது
3 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மே 19 ஆம் திகதிய 2437/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஆண்டறிக்கை.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v)    2021 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(vii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி - இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன - இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புக்கான சிவில் மாணவர் சேர்க்கையினை இடைநிறுத்தல்

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சமீபத்திய மின்சாரத் தடை மற்றும் சூரிய சக்தி சிக்கல்கள் தொடர்பாக 2025.05.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வலுசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை - பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையைத் தாபிப்பதற்காகவும்; (44 ஆம் அத்தியாயமான) குதிரைப் பந்தய ஓட்டத்தின்மீது பந்தயம் பிடித்தல் கட்டளைச்சட்டத்தையும், (46 ஆம் அத்தியாயமான) சூதாட்டக் கட்டளைச்சட்டத்தையும் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தையும் நீக்குவதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்வதற்கானது
(ii)    நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தம்) - (82 ஆம் அத்தியாயமான) நாணய மாற்றுண்டியல்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது

(iii) 2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சமுர்த்தி சட்டத்தினைத் திருத்துவதற்காக

“சமுர்த்தி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி கீதா ஹேரத்


அதனையடுத்து, 1651 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 18ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks