E   |   සි   |  

2025 ஜூன் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
2 : சபாபீடமிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஹன்சாட் அறிக்கைகள் தொடர்பில் கௌரவ ரவி கருணாநாயக்க தெரிவித்த கூற்று தொடர்பானது
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம  
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா -  மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க

தெங்கு கைத்தொழிற்துறை எதிர்கொள்ளும் சிக்கல்கள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பதிலளித்தார்.

(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

வடமாகாண வைத்தியசாலைகளிலுள்ள நிர்வாகிகளுக்கு எதிராக பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டமைக்காக ஊழல் தொடர்பான விசாரணை மேற்கொள்ளல்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தைத் திருத்துவதற்காக

“கம்பெனிகள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களுக்கு “மாகாண சபைத் தோ்தல்கள் சட்ட (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிழக்கு கடலோரப் பகுதியில் மீனவர்களின் அவலநிலை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks