கெளரவ சந்திம வீரக்கொடி பிரதிச் சபாநாயகராகவும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
கெளரவ (வண) அதுரலிய ரதன தேரர் அவர்களுக்கு
"சமனலகிரி சதராங்க (நாடி) வைத்திய சபை (கூட்டிணைத்தல்)"சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"வெளிநாடுகளில் தொழில் புரிவோர்களது ஊதியம், நஷ்டஈடு முதலியன" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1855 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2010 நவம்பர் 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[
வரவு செலவுத் திட்டம் 2011]