E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்)

சட்டவாக்கத்தினால் தாபிக்கப்பட்ட ஏதேனும் குழுவின், அதிகாரசபையின், சபையின் அல்லது நிறுவனத்தின் உறுப்பினரொருவராக திறைசேரிச் செயலாளர் இருப்பதற்கு அத்தகைய சட்டவாக்கம் ஏற்பாடு செய்துள்ளவிடத்தான சந்தர்ப்பங்களில், திறைசேரிச் செயலாளர் அவரது பிரதிநிதியாக இருப்பதற்கென, நிதி என்னும் விடயம் குறித்தொதுக்கப்பெற்றுள்ள அமைச்சரின் அமைச்சிலிருந்து அல்லது பொதுத் திறைசேரியின் ஏதேனும் திணைக்களத்திலிருந்து ஆட்களைப் பெயர் குறித்து நியமிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்)

மாநகரசபைகள் கட்டளைச் சட்டம், நகரசபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டம் என்பவற்றைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற் கானதொரு சட்டமூலம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


அதனையடுத்து, 1613 மணியளவில் பாராளுமன்றமானது 2010 நவம்பர் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks