பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.
(ii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2024 டிசம்பர் 31 ஆம் திகதிய 2417/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 ஜனவரி 27 ஆம் திகதிய 2421/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
ஒட்டுசுட்டான் ஓடு தொழிற்சாலையை மீள்திறத்தல்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
யாழ்ப்பாணத்தில் திஸ்ஸ ரஜ மஹா விகாரையின் அமைவிடம் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சுகாதார சேவைகள் பணியாட்டொகுதி மேம்பாடு” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1826 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 7ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks