E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

திரைசேரிச் செயலாளர் (பிரதிநிதியின் பெயர் குறித்த நியமனம்)

சட்டவாக்கத்தினால் தாபிக்கப்பட்ட ஏதேனும் குழுவின், அதிகாரசபையின், சபையின் அல்லது நிறுவனத்தின் உறுப்பினரொருவராக திறைசேரிச் செயலாளர் இருப்பதற்கு அத்தகைய சட்டவாக்கம் ஏற்பாடு செய்துள்ளவிடத்தான சந்தர்ப்பங்களில், திறைசேரிச் செயலாளர் அவரது பிரதிநிதியாக இருப்பதற்கென, நிதி என்னும் விடயம் குறித்தொதுக்கப்பெற்றுள்ள அமைச்சரின் அமைச்சிலிருந்து அல்லது பொதுத் திறைசேரியின் ஏதேனும் திணைக்களத்திலிருந்து ஆட்களைப் பெயர் குறித்து நியமிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்)

தவணை தவறுகையிலுள்ள வரிகளை அறவிடுவதற்கென காலத்தால் பிணிக்கப்பட்ட முறையில் சீர்வடிக்கம் செய்யப்பட்டதும் துரிதமானதுமானதொரு நடைமுறையொன்றுக்கு ஏற்பாடு செய்வதற்கும் தவணை தவறுகையிலுள்ள வரிகளை குறித்த சில சூழ்நிலைகளில் பதிவழிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

சூதாட்டம் (விசேட ஏற்பாடுகள்)

சூதாட்டத் தொழிலை ஆரம்பிக்க முன்னுகின்ற ஆட்கள் எந்த இடப்பரப்புகளில் தங்கள் தாபனங்களை நிறுவ முடியுமோ அந்த இடப்பரப்புக்களை பெயர் குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

இலங்கைப் பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு (நீக்கம்)

1996 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இலங்கைப் பகிரங்க தொழில்முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தை நீக்கம் செய்வதற்கும் 1996 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இலங்கைப் பகிரங்க தொழில்முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தின் நீக்கத்தின் விளைவாந்தன்மைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)

1990 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சடடத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்)

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்


கெளரவ தேனுக விதானகமகே அவர்களுக்கு "ஒலகங்கல மஹா சுதர்ஷன பரோபகாரி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பின் கீழான நான்கு தீர்மானங்கள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மொனராகல மாவட்டத்திலுள்ள காணிகளை தனியார் துறையினருக்கு மாற்றுதல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஒக்டோபர் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks