E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கெளரவ (பேராசிரியர்) ஜீ. எல். பீரிஸ் அவர்கள் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 32; எதிராக 139) நிராகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கொழும்பு - மாத்தறை அதிவேக பாதை: நுபே-கொடகம இழப்பீடு வழங்குவதிலுள்ள மோசடிகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஒக்டோபர் 08 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks