E   |   සි   |  

சபை அலுவல்கள்


2010 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சரத் பொன்சேக்கா
அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

2010 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வசந்த அலுவிஹாரே அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மாகாண சபைகள் (திருத்தம்) சட்டமூலம்

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.


கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் பிரேரிக்கப்பட்ட "பாராளுமன்ற சேவையின் சுயாதீனப்பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு" பற்றிய பிரேரணை சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1545 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஒக்டோபர் 07 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks