E   |   සි   |  

சபை அலுவல்கள்


(i) மறைந்த கௌரவ பி.டீ. வீரசிங்க த சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
(ii) மறைந்த கௌரவ ஈ. இரத்தினசபாபதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
(iii) மறைந்த கௌரவ வீ. நவரத்தினம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
(iv) மறைந்த கௌரவ எச். சந்திரமன் த சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்


தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

குடியியல் விமானப் போக்குவரத்து

குடியியல் விமானப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துகைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அத்துடன் தொடர்பான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்கும், சர்வதேசக் குடியியல் விமானப் போக்குவரத்து மீதான சமவாயத்திற்குப் பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்டவையும் அவற்றின் இடைநேர்விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் சார்பாக கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஈக்களின் தொல்லை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1635 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஒக்டோபர் 05 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks