E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ கரு ஜயசூரிய அவர்கள் பின்வரும் சட்டமூலத்தை சமர்ப்பிக்க அனுமதி கோரினார்.

"உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்திற்கும், எதன் அடிப்படையில் இவற்றைப் பெற்றுக்கொள்வது மறுக்கப்படலாம் என்பதை வரையறை செய்வதற்கும்; தகவல் சுதந்திர ஆணைக்குழுவை தாபிப்பதற்கும்; தகவல் அதிகாரிகளை நியமிப்பதற்கும்; தகவல்களுக்காக கோரிக்கை விடுப்பதற்கான செயல்முறைகளை வகுப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்"

எனினும், கலந்துரையாடலின் பின்னர் மேற்சொன்ன சட்டமூலம் கெளரவ கரு ஜயசூரிய அவர்களால் வாபஸ் பெறப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 செப்டெம்பர் 15ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 92 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும் அதற்கு எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


கெளரவ பி. தயாரத்ன அவர்களால் பிரேரிக்கப்பட்ட "வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகளைப் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழு" பற்றிய பிரேரணை சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1920 மணியளவில் பாராளுமன்றமானது 2010 செப்டெம்பர் 24 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks