E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.

(i) மறைந்த கௌரவ (கலாநிதி) கமல் கருணாநாயக்க
(ii) மறைந்த கௌரவ யசேந்திர பக்மீவெவ
(iii) மறைந்த கௌரவ சம்ளி குணவர்தன



2010 யூலை மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


கெளரவ சில்வேஸ்திரி அலன்றின் அவர்களுக்கு "மகேஸ்வரி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2010 செப்டெம்பர் 7ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks