E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.

(i) மறைந்த கௌரவ ஏ.டி.ஜே.எல். லியோ
(ii) மறைந்த கௌரவ எஸ். சிவமகாராஜா
(iii) மறைந்த கௌரவ எட்மண்ட் விஜேயசூரிய



சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகம்

தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகமொன்றைத் தாபிப்பதற்கும், நிறுவகத்தின் நிருவாகத்திற்கென ஆளுநர் சபையொன்றைத் தாபிப்பதற்கும்; தொழிநுட்பக் குழுக்களையும் தொழிற்சங்கங்களுக்கான பாடசாலை ஒன்றையும் தாபிப்பதற்கும்; ஆராய்ச்சியை நடாத்துவதற்கும், அளவைகளை நிறைவேற்றுவதற்கும், அத்துடன் இலங்கையில் தொழிற்கற்கைகளை மேம்படுத்துவதற்கு பயிற்சியை ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ தொழில் உறவுகள், விளைவுப்பெருக்க மேம்பாட்டு அமைச்சர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"உப தபால் அதிபர்களது தொழில் பாதுகாப்பு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பதிரண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1646 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks