E   |   සි   |  

சபை அலுவல்கள்


2010 யூலை மாதம் 20 ஆம் மற்றும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதிகளில் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சரத் பொன்சேக்கா அவர்களால் இரு சிறப்புரிமை பிரேரணைகளின்போது பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயங்கள், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் நிறைவேற்றப்பட்டன:- ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை "வெளிநாட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவப் பட்டதாரிகளுக்கான 'எக்ட் 16' பரீட்சை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 19 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks