E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ சனீ ரோஹன கொடிதுவக்கு அவர்களுக்கு "பலன புத்தர் சிலை அமைப்புச் சபை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு "குமாரசிறி ஹெட்டிகே மன்றச் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதோடு விவாதம் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பிணையில் செல்ல அனுமதித்தல் மற்றும் தண்டனை விதித்தல் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தின் சட்டவிதி" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 18 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks