E   |   සි   |  

சபை அலுவல்கள்


"18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரசையும் சகல தேர்தல்களிலும் வாக்குரிமையைப் பிரயோகிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது தேர்தல் ஆணையாளர் அல்லது அத்தகைய ஏனைய அதிகாரிகளினது கடமையாதல் வேண்டுமென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் XIV ஆம் அத்தியாயத்தை திருத்துவதற்கானதும் அத்துடன் அதனுடன் தொடர்புள்ள விடயங்கள் ஆகியவற்றிற்கான பிரமாணங்களை விதிப்பதற்குமானதொரு சட்டமூலம்"

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 34, எதிராக 87) அளிக்கப்பட்டதால் கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களுக்கு மேற்சொன்ன சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.


கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "மைத்திரி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பீடை கொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"நெடுஞ்சாலை மற்றும் புகையிரதப் பாதைகளில் விபத்துகளின் அதிகரிப்பு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 06 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks