E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

நீதித்துறை (திருத்தம்)

1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தை நீதி அமைச்சர் சார்பில் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.


கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு "ஆசிய, ஜப்பான், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் சமூக, பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்களுக்கு "கொடசர பியங்கல ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ அ. விநாயகமூர்த்தி அவர்களுக்கு "இராமகிருஷ்ண சாரதா மிஷன் (இலங்கைக் கிளை) (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு "ரி.பி. ஏக்கநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (கலாநிதி) சரத் வீரசேகர அவர்களுக்கு "அனுராதபுரம் ஸ்ரீ புஷ்பதான அபிவிருத்தி ஸ்தாபன (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதியம் (திருத்தம்) சட்டமூலம்
(ii) விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதியம் (திருத்தம்) சட்டமூலம்
(iii) அரசியலமைப்பின் கீழான தீர்மானம் - நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் சம்பளம்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வாக்காளர் இடாப்புக்களை இற்றைப்படுத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஆகஸ்ட் 03 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks