கெளரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு
"ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளன (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ சந்திம வீரக்கொடி அவர்களுக்கு
"தாருண்யட்ட ஹெட்டக் சங்கச் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ ரொசான் ரணசிங்க அவர்களுக்கு
"ரோஹித அபேகுணவர்தன மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2010 ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"கோழி இறைச்சி இறக்குமதி மற்றும் கோழி வளர்ப்பு பண்ணை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2121 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூலை 07 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[
வரவு செலவுத் திட்டம் 2010]