E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன:-

1. ஆயுதங்களை பதிவு செய்தல்

இலங்கையிலுள்ள அனைத்து ஆயுதங்களையும் பதிவுசெய்ய வேண்டுமெனவும் அவ்வாறு பதிவு செய்ததின் பின்னரும் யாராவது உரிமமற்ற ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த நபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு 20 வருட கட்டாய சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் இப்பாராளு மன்றம் கருதுகின்றது.

2. வங்கி அலுவலக நேரத்தை நீடித்தல்

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துமுகமாக வங்கி அலுவலக நேரத்தினை 9.00 மணி முதல் 16.00 மணிவரை நீடிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது.


அதனையடுத்து, 1445 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூன் 29 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1400 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks