E   |   සි   |  

சபை அலுவல்கள்


ஏழாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் கெளரவ. நிமல் சிறிபால த சில்வா அவர்களும், அரசாங்க முதற்கோலாசானாக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் கெளரவ. தினேஷ் குணவர்தன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என சபாநாயகர் அறிவித்தார்.


தெரிவுக்குழு

121 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் நடப்புக் கூட்டதொடரின்போது தெரிவுக்குழுவில் சேவையாற்றும் பொருட்டு சபாநாயகரின் தலைமையில் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களது பிதிநிதிகளான பாராளுமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பதினேழு (17) உறுப்பினர்களை கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

இன்று பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தற்போதைய கூட்டத்தொடரின்போது தெரிவுக்குழுவின் தவிசாளராக இருக்கும் சபாநாயகர் அவர்களுக்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்படும் பதினேழு (17) உறுப்பினர்கள் அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்களாக என பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

கெளரவ ஏ. எல். எம். அதாஉல்லா
கெளரவ தினேஷ் குணவர்தன
கெளரவ டியூ குணசேகர
கெளரவ நிமல் சிறிபால த சில்வா
கெளரவ றிஸாட் பதியுதீன்
கெளரவ பெஸில் ரோஹண ராஜபக்ஷ
கெளரவ விமல் வீரவங்ச
கெளரவ மைத்திரிபால சிறிசேன
கெளரவ ஜோன் அமரதுங்க
கெளரவ கரு ஜயசூரிய
கெளரவ ரவி கருணாநாயக்க
கௌரவ ஆறுமுகன் தொண்டமான்
கெளரவ அநுர திசாநாயக்க
கௌரவ சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
கெளரவ இராஜவரோதியம் சம்பந்தன்
கெளரவ ரஊப் ஹகீம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 மே 02ஆம், திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிப்படுமாக என கெளரவ பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் 2010 மே 05ஆம் திகதி புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 05 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks