E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1982 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.


கெளரவ துலிப் விஜேசேக்கர அவர்களுக்கு "ரோஹண திசாநாயக்க அமைப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் பிரேரிக்கப்பட்டன:

(i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 145, நிகழ்ச்சித்திட்டம் 2 (மீள் குடியமர்த்துகை, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)

சபையால் நிறைவேற்றப்பட்டது.

(ii) கிராஸ்ரூட்ஸ் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

சபையால் நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iii) அல்ஹாஜ் எஸ். எம். எம். ஹுஸைன் அறநம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

சபையால் நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iv) இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை

சபையால் நிறைவேற்றப்பட்டது.

(v) தாலியவக்க ஸ்ரீ ஆனந்த விஹாரை கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை

சபையால் நிறைவேற்றப்பட்டது.

(vi) கருணா சமாதி ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை

சபையால் நிறைவேற்றப்பட்டது.

(vii) கண்டி ஸ்ரீ கல்யானோதய சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மக நெகும இயந்திர மற்றும் நிர்மாண நிலையம்: ஊழல் மற்றும் மோசடிகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1613 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 23 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks