E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான மற்றும் 42 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன: (i) புண்ணிய ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (ii) இலங்கை சிறுகைத்தொழிற்சபை (கூட்டிணைத்தல்) (திருத்தம்) சட்டமூலம் இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (iii) விலங்குகளுக்குக் கொடுமையிழைத்தலைத் தடுப்பதற்கான இலங்கைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (iv) இலங்கை கடல்கடந்த முஸ்லிம் கல்விசார் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (v) லஸந்த அலகியவன்ன மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (vi) அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (vii) கொட்டாவ ஸ்ரீ புண்ணியாபிவர்தன விஹாரஸ்தான செயற்பாட்டுச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (viii) பண்டாரகம விக்கிரமசீலா தர்மாயதனய சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்புப் பிரேரணை 'சர்வதேச நாணய நிதியக் கடன்' எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஆகஸ்ட் 19 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks