E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்;

சொத்துக்களால் ஆதாரப்படுத்தப் பட்ட பிணைப் பொறுப்பளித்தல்

மூலதனச் சந்தையின் அபிவிருத்திக்கு செயலமைவுத் திட்டமொன்றாக பிணைப்பொறுப்பளிப்பதற்கு வசதியளிப்பதற்கும், பிணைப் பொறுப்பளித்தல் அமைப்புகளை உருவாக்குவதற்கும் சொத்துக்களால் ஆதாரப் படுத்தப்பட்ட பிணையங்களில் முதலீட்டாளர்கள் தொடர்பில் வகைசொல்லும் பொறுப்பிற்கு வசதியளிப்பதற்கும், பிணைப்பொறுப்பளித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள தோற்றுவிப்போர்களினதும் நிதி சார்ந்த இடை வருகையாளர்களினதும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

அசைவுள்ள ஆதனங்கள் தொடர்பிலான கடப்பாடுகளின் உத்தரவாதத்துக்கும், பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் இடாப்பொன்றைப் பேணுவதற்கும் மேலும் அத்துடன் தொடர்புபட்ட கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்

காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்)

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

இலங்கை முதலீட்டுச் சபை (திருத்தம்)

1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்


சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 மே 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 74 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 88 வாக்குகளும் அதற்கு எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதனையடுத்து,1632 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மே 06 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks