E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. மேலும் 1 முதல் 5 வரையான விடயங்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. (i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம் (ii) சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் (iii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) சட்டமூலம் (iv) நிதி (திருத்தம்) சட்டமூலம் (இல. 352) (v) நிதி (திருத்தம்) சட்டமூலம் (இல. 358) (vi) பற்றுக்கள் வரி (திருத்தம்) சட்டமூலம் (vii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை 'கிழக்கு மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகள் எவ்வாறு' எனும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கௌரவ ஜயந்த விஜேசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து,1610 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஏப்ரல் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks