E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ (வண) உடவத்தே நந்த தேரர் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
  • "ஹங்குரான்கெத மாதென்வல ரஜ மகா விகாரை அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)"
  • "அத்தரகல்ல ஐக்கிய பிரஜைகளுக்கான அபிவிருத்தி அமைப்பு (கூட்டிணைத்தல்) "
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1) ஆம் மற்றும் (2) ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்ட (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்) சட்டமூலம் (ii) விதுரர்களினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்திட்டம் (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்) சட்டமூலம் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'விஷேட பொருளாதர மையங்களை ரத்மலான, பத்தரமுல்ல மற்றும் பேலியகொடவில் நிறுவுதல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ லலித் திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2009 மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1558 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks