E   |   සි   |  

2022 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் மென் பிரதிகள் மற்றும் வன் பிரதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111  இன்  ஏற்பாடுகளினாலும் 2022 நவம்பர் 08 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணையினாலும் தடைபெறாமல் 2022 நவம்பர் 11 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும், தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் பன்னிணெ்டு (12) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என  கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2023) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அலுவலர்களின் குறைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1800 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2023) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2022 நவம்பர் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2023]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks