E   |   සි   |  

சபை அலுவல்கள்

மறைந்த முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான கௌரவ அநுர பண்டாரநாயக்க, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 67, 68, 69, 71 ஆம் மற்றும் 72 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன:

(i) இலங்கை கடல்கடந்த முஸ்லிம் கல்வி நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஆ" விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) ஸம் நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஆ" விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iii) இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஆ" விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iv) மகாவலி கலாசார மன்ற நம்பிக்கை நிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலிக்கப்பட்டு சபையினால் நிறைவேற்றப்பட்டது.

(v) கமகே ஆத்தர் பெரேரா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலிக்கப்பட்டு சபையினால் நிறைவேற்றப்பட்டது.

அதனையடுத்து, 1505 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மார்ச் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks