பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான உயர் நீதிமன்றப் பதிவாளர் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு பதிலாக கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.யூ.எம். அலி சப்ரி அவர்கள் முன்வைத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ குணதிலக ராஜபக்ஷ அவர்களுக்கு “வீமங்சா தம்மகுப்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ வீரசுமன வீரசிங்ஹ அவர்களுக்கு “ஸ்ரீ சீலானந்த மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
(i) நொத்தாரிசு (திருத்தம்)
(ii) அற்றோணித் தத்துவம் (திருத்தம்)
(iii) ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தம்)
(iv) விருப்பாவணங்கள் (திருத்தம்)
(v) மோசடிகளைத் தடுத்தல் (திருத்தம்)
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சமிந்த விஜேசிறி
(ii) கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய
அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஒக்டோபர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks