E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் கெளரவ (திருமதி) நிருபமா ராஜபக்ஷ் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
  • "மகேஸ்வரி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"
  • "மைத்திரிபால சிறிசேன லக்தரு திரிய மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"
"விலங்கினம் நலம் பேணல்"
கெளரவ (வண.) அதுரலிய ரதன தேரர் அவர்களுக்கு விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; சமுதாயத்திலுள்ள விலங்குகள்பால் அன்பையும் இரக்கத்தையும், பொறுப்புள்ள நடத்தையையும் வளர்ப்பதற்கும்; பொதுவாக விலங்கின நலம் பேணலுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான பின்வரும் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் சபையால் நிறைவேற்றப்பட்டது. பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 23 ஆம் 24 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஆ" விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன. (i) விலங்குகளுக்குக் கொடுமையிழைத்தலைத் தடுப்பதற்கான இலங்கைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (ii) இலங்கை கட்டமைப்புசார் எந்திரவியலாளர் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பின்வரும் விடயங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 25,26,27,29 ஆம் மற்றும் 30 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) சபையால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. (i) பாஹியங்கல பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (ii) கொலன்னாவ பெளத்த இளைஞர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (iii) இலவச பாலர் பாடசாலை அத்துடன் நலன்புரித்தொகுதி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (iv) றங்கா கலை நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (v) ஜகத்தலா சமூக நலன்புரி நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'இறப்பர் தொழிற்சாலைகளின் அழிவு' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ ஆர். எம். காமினி ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2009 பெப்புருவரி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1415 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks