பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.09.24 முதல் 2021.11.17 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(v) சுற்றாடல் அமைச்சின் கழிவு முகாமைத்துவம் பற்றிய தேசியக் கொள்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சிசிர ஜயகொடி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள் (2013 மற்றும் 2014)
(iii) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை (2015)
(iv) த அசோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்டின் ஆண்டறிக்கை (2016)
(v) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குக்கூற்று (2015)
(vi) செலசினே ரூபவாஹினி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“புகையிரத சேவையிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மிலான் ஜயதிலக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2022]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks