பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ திஸகுட்டி ஆரச்சி அவர்களினால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களின் எழுப்பப்பட்ட சிறப்புரிமை விவகாரம்
‘B’ : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2022 வரைவு மதிப்பீடு நிரல்களின் உத்தேச மாற்றங்களுக்கான பட்டியல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ துமிந்த திசாநாயக்க
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
காப்புறுதி முகவர்களுக்கான ஊழியர் நலனோம்புகைகள்
மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
கிளைபோசெற் மீதான தடையை நீக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்தல் தொடர்பில் கூற்றொன்றினை கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாரம்பரிய கைத்தொழில்களை மேம்படுத்தும் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ குணதிலக ராஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 24ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2022]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks