பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 16ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ தயாசிறி ஜயசேகர
(ii)    கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன
(iii)    கௌரவ வஸந்த யாபாபண்டார        -    இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ வீரசுமன வீரசிங்க                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

அரச வங்கிகளிலுள்ள ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

மேற்சொன்ன வினாவிற்கு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் பதிலளித்தனர்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அமைச்சு அலுவலகத்திற்கான வாடகைக் கட்டிடம் மற்றும் இதர செலவுகள் தொடர்பில் கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ரோஹண பண்டார அவர்களுக்கு “ஆனந்த அலுத்கமகே அபிவிருத்தி, சமூக சேவைகள், அறக்கட்டளை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2022) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சுற்றுலாத் துறைக்கான உருவாக்கல்-செயற்படுத்தல்-பரிமாற்றல் (BOT) முறைமை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2022) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2021 நவம்பர் 17ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2022]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks