பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் ஆண்டறிக்கைகள்
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கையும் கணக்குகளும்
(vi) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் படையணியின் ஆண்டறிக்கைகள்
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எஸ்.எம். சந்திரசேன – இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ நிபுண ரணவக
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
(iii) கௌரவ காமினி வலேபொட
(iv) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்பீடு தொடர்பான அரச சுற்றறிக்கை
மேற்சொன்ன வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் - ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளின் பயன்பாடு, தொகைக்குவிப்பு, தயாரிப்பு மற்றும் கைமாற்றல் என்பவற்றைத் தடைசெய்தலும் அழித்துவிடுதலும் பற்றிய சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைாவன கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது
(ii) நீதித்துறை (திருத்தம்) - 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “சஹன சமுதாய அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம்
(ii) குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம்
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ
(ii) கௌரவ வேலு குமார்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்துள்ள குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை தொடர்பான பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks