பார்க்க

E   |   සි   |  

2021 நவம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : 2021 நவம்பர் 12ஆம் திகதி, வெள்ளிக்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III மற்றும் IV ஆம் பகுதிளையும், மூன்றாவது தொகுதியின் II ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(vii)    2020 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2019 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்
(x)    2020 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிருணய ஆணையாளர் நாயகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர்நாயகத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xii)    2020 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xiv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதிய 2251/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xv)    திருத்தப்பட்டவாறான, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 8 மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 யூன் 30 ஆம் திகதிய 2234/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 08/2021)
(xvi)    திருத்தப்பட்டவாறான, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 8 மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 16 ஆம் திகதிய 2241/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
    (மதுவரி அறிவித்தல் இலக்கம் 09/2021)
(xvii)    திருத்தப்பட்டவாறான,1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3இ ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 03 ஆம் திகதிய 2239/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(xviii)        2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 11 ஆம் திகதிய 2240/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வெகுசனஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஹேஷா விதானகே                    
(ii)    கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர                    
(iii)    கௌரவ யதாமிணீ குணவர்தன                 -                    இரண்டு மனுக்கள்  
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க, மஹபொல உயர் கல்விப் புலமைப் பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“மஹபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


அதனையடுத்து, 1627 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks